Cine Bits
பாகுபலி கதை முடிந்தது என பிரபாஸ் கூறியுள்ளார்! ரசிகர்கள் சோகம்

பாகுபலி இரண்தாம் பாகத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு வெளியில்வந்தவர்களுக்கு அடுத்து எழுந்த முதல் கேள்வி “பாகுபலி 3 வருமா?” என்பதுதான். இரண்டு வருடங்களுக்கு முன்பே ராஜமௌலி மூன்றாம் பாகம் நிச்சயம் வரும் என ட்விட்டரில் கூறியிருந்தார். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என பாகுபலி கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். தற்போது அதை பிரபாஸ் உறுதிசெய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது “பாகுபலி கதை முடிந்தது! 3ம் பாகத்திற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் கார்ட்டூன், டிவி தொடர், காமிக்ஸ் ஆகியவற்றில் பாகுபலி தொடரும்” என தெரிவித்துள்ளார். 5 வருடங்கள் கழித்து தற்போதுதான் பிரபாஸ் “சாஹோ” என்ற புதிய படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.