பாகுபலி நடிகரின் திக் திக் அனுபவம் !

பாகுபலி ரிலீஸ் ஆகும்போது எனக்கு திக் திக் என்று இதயம் படபடத்தது. படத்துக்கு அதிக எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் தெலுங்கில் அது வேறுவிதமாக இருந்தது. இதில் கட்டப்பாவால் நான் கொல்லப்படுவதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது தான் காரணம். அதனால் படம் ரிலீஸ் ஆகும் நாளில் என் நண்பர்களை அழைத்து, ‘படம் ஹிட் என்றால் என்னை எழுப்புங்கள் இல்லாவிட்டால் எழுப்பாதீர்கள்’ என்று கூறினேன். படம் வெளியானது. ஆனால் யாரும் என்னை எழுப்பவில்லை. பாகுபலி தோல்வி அடைந்து விட்டது என்று எண்ணினேன். ஆனால் அன்று மாலை முதல் மக்கள் படத்துக்கு திரண்டு வர ஆரம்பித்தார்கள். அதன்பிறகுதான் எனக்கு உயிரே வந்தது. நான் நடித்துள்ள சாஹோ படம் இம்மாதம் வெளியாகிறது. பாகுபலி ரிலீஸ் ஆகும்போது இருந்த அதே திக் திக் நிலைமையில்தான் தற்போதும் இருக்கிறேன்.