பாகுபலி படத்தின் வில்லன் ராணாவுக்கு மீண்டும் இப்படி ஒரு அதிர்ஷடமா?

இந்திய வரலாற்றுத் திரைப்படம் பாகுபலி  உலகளவில் பெரும் சாதனை படைத்தது ஆகும். இப்படத்தில் பிரபாஸ்க்கு நிகராக தன் திறமையை வெளிப்படுத்தினார் வில்லன் ராணா. பல்லால தேவனாக அவரின் நடிப்பு பாராட்டத்தக்கது. தற்போது இவர் தெலுங்கு சானிலில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் மீலோ எவரு கோடீஸ்வரரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறாராம். இந்நிகழ்ச்சியை ஏற்கனவே மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நாகார்ஜுனா ஆகியோர் தொகுத்து வழங்கினர். இனி ராணாவை அங்கே காணலாம். இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த ஷோ வரபோகிறது. மிகவும் கலகலப்பாக இருக்கும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சி என அவர் கூறியுள்ளார்.