பாகுபலி பிரபாஸுக்கு திருமணப்பெண் இவர்தானாம்! அனுஷ்கா இல்லை!

பாகுபலி படம் மூலம் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பிரபாஸ். இவரின் திருமணத்திற்காக 6000 வரை திருமண வரன்கள் வந்ததாக ஏற்கெனவே செய்திகள் வந்தன. இதற்கு நடுவில் சினிமாவில் ஹிட் ஜோடிகளான பிரபாஸ், அனுஷ்கா நிஜ வாழ்க்கையிலும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பிரபாஸுக்கு அடுத்த வருடம் கல்யாணம் என்றும், ராசி சிமெண்ட் உரிமையாளர் பூபதி ராஜு அவர்களின் மகள் தான் பிரபாஸுக்கு பார்த்திருக்கும் வரன் என்று தகவல்கள் வந்துள்ளது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.