பாகுபலி பிரபாஸ் தன் ரசிகளுக்கு எழுதிய மடல்

பாகுபலி நாயகன் பிரபாஸ் ஃபேஸ்புக்கில் ரசிகர்களுக்கு மடல் ஒன்றை எழுதி உள்ளார். அந்தமடலில்,”என்னை அன்பு மழையால் நனைய வைத்து கொண்டிருக்கும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் என் அன்பை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் அன்பை ஈடுகட்ட என்னால் முடிந்த கடின உழைப்பை கொடுத்து பாகுபலி 2 படத்தில் நடித்தேன். திறமையை வெளிப்பெடுத்தினேன். என் அன்பை மீண்டும் மீண்டும் உங்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து, இந்த பிரமாண்ட படைப்பில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குநர் ராஜமௌலிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.”என்று அவர் கூறியுள்ளார்