பாகுபலி 2 சீனாவில் வெளியாக உள்ளதாம்! தங்கல் பட சாதனையை முறியடிக்குமா?

தற்போது பாகுபலி 2 படம் வெளிவந்து 50 நாட்கள் மேலாகிவிட்டது. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பிரம்மாண்டமாக வெளிவந்து சாதனை படைத்தது. பலரும் பாராட்டிய இப்படம் ரூ 1500 கோடி வசூலை தாண்டியது. பின் இதன் வசூல் சாதனையை அமீர்கானின் தங்கல் முந்தியது. தற்போது சீனாவில் இப்படம் வரும் செப்டம்பர் 17 ம் தேதி 4000 தியேட்டர்களில் வெளியாக உள்ளதாம். அப்படி வெளியானால் தங்கல் பட சாதனையை முறியடிக்க வாய்ப்புகள் ஏராளம் என்று குறிப்பிடதக்கது.