‘பாகுபலி 2’ படத்தின் பரபரப்பிலும் சலிக்காத​ ‘பவர்பாண்டி’ வசூல்

கடந்த வெள்ளியன்று வெளியான​ 'பாகுபலி 2' போட்டியே இல்லாமல் சோலோவாக ரிலீஸ் ஆனது. கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள 90% திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆனதாக கூறப்படுகிறது. அதேபோல் வசூலிலும் இந்த படம் மற்ற இந்திய படங்களின் சாதனையை முறியடித்துள்ளது.

இந்த நிலையில் 'பாகுபலி 2' படத்தின் பரபரப்பிலும் தனுஷ் இயக்கிய 'பவர்பாண்டி' படத்தின் வசூல் கடந்த வாரம் சிறப்பாக இருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் கூறுகின்றன.குறிப்பாக சென்னையில் கடந்த வார இறுதியில் 'பவர்பாண்டி' திரைப்படம் 8 திரையரங்குகளில் 41 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ. 5,53,840 வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 30 வரை ரூ.1,81,97,690 வசூல் செய்துள்ளது. பெரிய ஹீரோக்கள் இல்லாத இந்த படம் சென்னையில் மட்டுமே ரூ.2 கோடி வசூல் செய்தது இந்த​ படத்தின் வெற்றியாக​ கருதப்படுகிறது.