பாகுபலி 2 படம் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழு, ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரம்மாண்டத்தின் உச்சமாக இந்திய சினிமாவில் உருவாக்கப்பட்ட படம் பாகுபலி 2. இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் வெளியாகவில்லை. தயாரிப்பாளர்களுக்கு, விநியோகஸ்தர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனை தான் காரணம். ஆனால் தற்போது பிரச்சனைகள் தீர்ந்து காலை 11 மணி முதல் படம் வெளியாகும் என்று கூறப்பட்டுவிட்டது. திரையரங்கு பிரச்சனை போதாது என்று தற்போது இணையத்தில் முழு படமும் வெளியாகி இருப்பது படக்குழு மட்டுமில்லாது சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.