பாகுபலி 2 பட இசை வெளியீட்டு விழா ஒரு விஷயத்துக்கு மட்டும் ரூ 50 லட்சம் செலவு செய்த படக்குழு.

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் படம் பாகுபலி 2. இப்படம் பிரம்மாண்டத்தின் உச்சமாக தெலுங்கில் தயாராகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்துள்ள நிலையில் தெலுங்கு பதிப்பிற்கான ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக ஹைதராபாத்தில் நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமௌலி கண்கலங்கியதால் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. நிகழ்ச்சியின் விழா மேடை, நிகழ்ச்சி தொகுப்பு, ஆடை அலங்காரம் என நிகழ்ச்சிக்கு பெறும் தொகையை செலவிட்டுள்ளனர். ஒவ்வொரு பிரபலமும் மேடையில் தோன்றும் போது கலர் கலராக பட்டாசு என நிகழ்ச்சியே பிரம்மாண்டமாக இருந்தது. இந்த கலர்கலர் பட்டாசிற்கு மட்டும் பாகுபலி 2 படக்குழு ரூ. 50 லட்சம் வரை செலவழித்துள்ளனர். இந்த தகவல் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.