பாகுபலி 2 பாக்ஸ்ஆபிஸில் எவ்வளவு?

பாகுபலி 2 பாக்ஸ்ஆபிஸில் மொத்த இந்தியாவே பிரமித்து நிற்கும் அளவுக்கு கலக்கிவருகிறது . இப்படத்தின் வசூல் முதல் நாளே 100 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை தொட்டுவிட்ட நிலையில், மூன்று நாள் முடிவில் உலகம் முழுவதும் படத்தின் வசூல் 500 கோடி ரூபாய் அளவுக்கு வந்துள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தை ஹிந்தியில் வெளியிட்ட கரண் ஜோகர், இந்தியாவில் படத்தின் நெட் வசூல் மொத்தம் 303 கோடி என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளர். ஹிந்தியில் 128 கோடி ருபாய், மற்றும் மற்ற 3 மொழிகளில் (தமிழ், தெலுங்கு, மலையாளம்) ரூ. 175 கோடி வசூல் வந்துள்ளது. இந்த தொகை கேளிக்கை வரி போக மீதி உள்ள தொகை என்பது நினைவில் கொள்ளவேண்டிய விஷயம்.