பாகுபலி 2 ரூ.1000 கோடி வசூல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற பாகுபலி 2.ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியான இப்படம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலுமே பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் சுமார் 9000 தியேட்டர்களில் இப்படம் வெளியானது.இப்படம் உலக அளவில் 9 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலித்து தனிப் பெரும் சாதனையைப் படைத்துள்ளது. படத்தயாரிப்பு நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாகுபலி படம் இந்தியத் திரையுலகில் தனிப்பட்ட பெருமையைப் படைத்துள்ள நிலையில், பல கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமையும் என்று எதிர்பார்கப்படுகிறது.