பாகுபலி 3 படத்தில் நான் நடிக்க வேண்டும்! ஆசையை வெளிப்படையாக சொன்ன ஹாலிவுட் நடிகர்!

பாகுபலி படம் எப்படியான ஒரு வரவேற்பை உலகம் முழுக்க பெற்றது. இந்திய சினிமா வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற இப்படத்தை ராஜமௌலி இயக்கியிருந்தார். வேற்று மொழிகளிலும் உலகின் பிறநாடுகளில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டியது. இப்படத்தின் 3ம் பாகம் வந்தால் நன்றாக தான் இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் ராஜமௌலி தற்போது RRR படத்தின் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் Avangers படத்தில் Nick Fury ரோலில் நடித்த சாமுவேல் எல் ஜாக்சன் நேர்காணலில் கலந்துகொண்டார். இதில் அவரிடம் இந்திய படங்களில் நடிப்பது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இதில் அவர் பாகுபலி 3 படத்தில் நான் நடிக்க வேண்டும் என தன் ஆசையை சற்றும் யோசிக்காமல் கூறியுள்ளார்.