பாக்யராஜ் அணியில் ஐந்து பேரின் மனுதாக்கல் தள்ளுபடி!

நாசர் தலைமையிலான பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர். இந்த அணியின் வேட்பாளர்கள் அனைவரும் மனுதாக்கலும் செய்துவிட்டனர். இவ்விரு அணிகளும் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்துவிட்டனர். நேற்று இந்த தேர்தலுக்கான மனுதாக்கல் செய்ய கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மனு பரிசீலனை செய்தபோது நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்த நடிகர்கள் விமல், ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்ட ஐந்து பேரின் மனு தள்ளபடி செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. சந்தா கட்டாததால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.