பாடகரானார் விக்ரமின் மகன் துருவ்!

விக்ரம் மகன் துருவ், ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தில் கதாநாயகனாக அறி முகமாகி உள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வெற்றிகரமாக ஓடி வசூல் அள்ளிய ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகிறது. ஆதித்ய வர்மா படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை துருவ் விக்ரம் பாடி உள்ளதாக அறிவித்து உள்ளனர். இதன் மூலம் முதல் படத்திலேயே பாடகராகவும் அவர் அறிமுகமாகி உள்ளார். விக்ரமும் பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதித்ய வர்மா படத்தில் துருவுடன் பனிதா சாந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் ரெட்டி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய கிரிசய்யா இயக்கி உள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.