பாடலாசிரியராக மாறிய சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். இதற்கு முன் சிவகார்த்திகேயன் கோலமாவு கோகிலா படத்திற்காக எனக்கு கல்யாண வயசுதான் வந்திருச்சு என்ற பாடலை எழுதியிருந்தார். அதற்குப் பிறகு நம்ம வீட்டு பிள்ளை படத்தில், காந்த கண்ணழகி பாடலை எழுதியிருக்கிறார். இரண்டும் ரசிகர்கள் இடையே பெரும் ஆதரவை பெற்று ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் நடிக்கும் ஆதித்யா வர்மா படத்தில், இது என்ன மாயமே என்று தொடங்கும் பாடலை எழுதி இருக்கிறார் சிவகார்த்திகேயன். நடிகர் விக்ரம் தனது மகனுக்காக ஒரு பாடல் எழுதி தரும்படி கேட்டுள்ளார் உடனே சிவகார்த்திகேயனும் ஆதித்யா வர்மாவுக்கு பாடல் எழுதி கொடுத்துள்ளார்.