பாட்டி வயதில் குமாரி பெண்ணாக மாறிய சச்சும்மா !

எம்.ஜி.ஆர்,சிவாஜி காலம் தொட்டு கிட்டத்தட்ட 500 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் மூத்த நடிகை சச்சு ’பேரழகி ஐ.எஸ்.ஓ’ படத்தில் தான் இத்தனை ஆண்டுகளாக நடித்திராத ஒரு புதிய கேரக்டரில் நடித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். 'கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ்' சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் பேரழகி ஐ.எஸ்.ஓ. நீ என்ன மாயம் செய்தாய், மித்ரா ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை  கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சீனியர் நடிகை சச்சு இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். அறிவியல் கதை என்றாலும் அதை சீரியசாக இல்லாமல் நகைச்சுவை கலந்து ஒரு பாட்டி பேத்தியின் கதையாக அனைவரும் பார்க்கும் விதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் விஜயன்” என்கிறார் சச்சு.