பானுப்ரியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி – குழந்தை தொழிலாளர் எதிர்ப்பாளர் வலியுறுத்தல் !
நடிகை பானுப்ரியாவின் வீட்டில் 4 சிறுமிகளை பணியில் அமர்த்தி இருந்ததாக கடந்த ஜனவரி மாதம் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியை சேர்ந்த பெண் ஒருவர் அம்மாநிலத்தில் உள்ள சமல்கோட் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் பானுப்ரியாவின் சென்னை வீட்டில் தனது 14 வயது மகள் வேலை செய்து வருவதாகவும் அவளை பானுப்ரியா சித்ரவதை செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக பானுப்ரியா மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் நேற்று கடை பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக குழந்தைகள் நல செயற்பாட்டாளர் சேசா ரத்னம் கூறும்போது, நடிகை பானுப்ரியா மீது குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய குற்றத்துக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். ஆனால் இந்த விவகாரத்தை பானுப்ரியா ஏற்கனவே மறுத்துள்ளார். தனது வீட்டில் வேலை செய்த பெண் மீது அவர் திருட்டு குற்றம் சுமத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.