பாபிசிம்ஹா மீது மதுபாலா வருத்தம் !

தமிழில் ரோஜா படத்தில் பிரபலமாகி 1990–களில் முன்னணி நடிகையாக இருந்த மதுபாலா நீண்ட இடைவெளிக்கு பிறகு பாபி சிம்ஹா கதாநாயகனாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த அக்னி தேவி படத்தில் வில்லியாக வந்தார். இந்த படம் சர்ச்சையில் சிக்கியது. படத்தை தடைசெய்யும்படி பாபிசிம்ஹா கோர்ட்டுக்கு சென்றார். இந்த படத்தின் சர்ச்சைகள் குறித்து மதுபாலா, நான் அக்னிதேவி படம் சம்பந்தமாக நடக்கும் பிரச்சினைகளை கவனித்துக்கொண்டு இருக்கிறேன். ஒரு நல்ல படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டு இருப்பது வருத்தமாக உள்ளது. இயக்குனர்கள் ஜான் மற்றும் சூர்யாவுக்காக வருந்துகிறேன். எனது சினிமா வாழ்க்கையில் நான் நடித்ததில் சிறந்த படம் இதுதான். சிறந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்து இருந்தார்கள். இதை பெரிய ஆசிர்வாதமாக கருதுகிறேன். இந்த படத்தின் இயக்குனர்கள் ஜான், சூர்யா ஆகியோருக்கு ஆதரவாக இருப்பேன் இவ்வாறு மதுபாலா கூறியுள்ளார்.