Cine Bits
பாபி சிம்ஹா நடிக்க தயாரிப்பாளர் சங்கம் இடைக்கால தடை !
கடந்த வாரம் வெளியான படம் 'அக்னி தேவி'. இந்த படத்தில் நடித்த பாபி சிம்ஹா கருத்து வேறுபாடு காரணமாக படத்தின் படப்பிடிப்பில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார். இதனையடுத்து இயக்குநர் பால்ராஜ் விஎப்எக்ஸ், டூப் உதவியுடன் மீதி படத்தை எடுத்து முடித்தார். இந்த படம் திரைக்கு வந்தவுடன், நடிகர் பாபி சிம்ஹா அதிர்ச்சியில் காவல்துறையிடம் புகார் அளித்தார். இந்நிலையில் இந்த புகாரை வாபஸ் வாங்க தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியது. ஆனால் பாபி சிம்ஹா மறுத்துவிட்டார். இதனையடுத்து நடிகர் பாபி சிம்ஹா படத்தில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் இடைக்கால தடை விதித்துள்ளது.