பார்க்கத் தோனுதே என்ற தலைப்பில் கிராமத்து பேய் படம்.

பார்க்கத் தோனுதே  என்ற தலைப்பில் வி.கே.மாதவன் தயாரிக்கும்,படத்தை ஜெய் செந்தில்குமார் “வாசவி பிலிம்ஸ்” சார்பில் இயக்குகிறார். இதில் ஜி.ரமேஷ் ஒளிப்பதிவாளராகவும், மனீஷ் இசையமைப்பாளராகவும் இருக்கிறார்கள்.இதில்  புது முகங்களான ஹர்ஷா, சாரா ஆகியோர்  நடித்துள்ளனர். இதில்  கதாநாயகன்  வெட்டியாக  நண்பர்களுடன்  ஊர் சுற்றி,  காமெடி செய்து கொண்டு ஜாலியாக கிராமத்தில் வலம்  வந்து கொண்டிருக்கிறார் ஹர்ஷா. அவருக்கு இந்த கிராமத்தில் உள்ள சாரா என்ற பெண் மீது காதல் ஏற்பட்டு இருவரும் காதலர்களாக வலம்  வருகிறார்கள்.

 சராவிற்கு  கிராமத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தால்  பேய் பிடித்துக் கொள்கிறது. இந்த கதை  சாரா மீதிருந்த பேய் விலகியதா?  காதலர்கள் ஒன்றினைந்தார்களா? என்பதை பற்றியது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி கொடைக்கானல் ஒகேனக்கல் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. இதில்  காதல், காமெடி, ஆக்ஷன், திகில்  கலந்த படமாக “பார்க்கத் தோனுதே”  உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.