Cine Bits
பார்ட்டி படத்தின் மூலம் டீ.சிவாவிற்கு மானியம் கிடைத்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் படம் பார்ட்டி. இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் 100 சதவிகித படப்பிடிப்பும் பிஜி தீவில் நடைபெற்றது. இப்படத்தை இந்த தீவில் தயாரித்த, தயாரிப்பாளருக்கு படத்தின் பட்ஜெட்டில் 10 சதவீதம் மானியமாக வழங்கப்பட்டது. இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தை லைகா புரடக்ஷன்ஸ் வாங்கி உலகம் முழுக்க வெளியிட உள்ளது. பார்ட்டி படம் நல்ல விலைக்கு விநியோகமாகியுள்ளது.