பார்த்திபனுக்கு ஆஸ்கர் அவார்ட் கிடைக்கவேண்டும் – ரஜினி வாழ்த்து !

பார்த்திபன் கதை, திரைக்கதை எழுதித் தயாரித்து நடித்துள்ள, அதாவது படம் முழுக்க அவர் ஒருவர் மட்டுமே நடித்துள்ள படம் ‘ஒத்தச் செருப்பு. இது குறித்து ரஜினி சற்றுமுன்னர் பார்த்திபனை வாழ்த்தியுள்ளார் அதில் “என் அருமை நண்பர் பார்த்திபன் ஒரு படைப்பாளி. வித்தியாசமான படைப்பாளி. நல்ல மனிதர். புதிது புதிதாக சிந்திக்ககூடியவர். நல்ல நல்ல படங்களை கொடுத்துள்ளார். இதற்கு முன் 1960 களில் சுனில் தத் ஒரு படத்தை எடுத்தார். அவர் மட்டுமே படத்தில் இருந்தார், வேறு யாருமே கிடையாது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு பார்த்திபன் தென் இந்தியாவில் முதன்முறையாக இந்தப் படத்தை எடுக்கிறார். அது மட்டுமல்லாமல் பார்த்திபனே கதை எழுதி, நடித்து, இயக்கி, தயாரித்து உள்ளார். இது உலகத்திலேயே முதன்முறை. இந்த முயற்சிக்கு அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். அவரின் இந்த முயற்சிக்கு ஆஸ்கர் அவார்ட் கிடைக்கவேண்டும் என ரஜினி பார்த்திபனை வாழ்த்தியுள்ளார்.