‘பாலா’வின் “வர்மா”, ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்!!!

இயக்குனர் பாலா கடந்த வருடம் பெரிய வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' என்ற படத்தை “வர்மா” என்ற பெயரில் ரீமேக் செய்ய உள்ளார். இதுவரை ரீமேக் படங்களையே இயக்காத இவர் விக்ரம் கேட்டுக்கொண்டதால் இந்த படத்தை இயக்கி தர சம்மதித்துள்ளார். இதில் ஹீரோவாக விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகி உள்ளார். படத்திற்கு ஏற்ற நாயகியை தேர்வு செய்துவிட்டார்களாம், ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படப்பிடிப்பு துவங்கும் போது வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார்களாம். இப்படத்தின் நாயகனுக்கு அணிய உள்ள ஆடைகளை தேர்வு செய்ய நாயகனும், விக்ரமும் வெளிநாடு பறந்துள்ளார்களாம். பாலா தற்போது இயக்கி வரும் நாச்சியார் படத்தின் அணைத்து வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில் அடுத்த மாதம் படம் வெளியாக உள்ளது. வர்மா படத்தின் படப்பிடிப்பு இந்த மாதக் கடைசி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பித்துவிடுவார் என்கிறார்கள்.