பாலாவிற்கு தோள் கொடுக்கும் பிரபல முன்னணி நடிகர்!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் முதலில் கமர்ஷியல் படங்களை தான் விரும்பி பார்த்தார்கள் ஆனால் அதை மாற்றியவர் வரிசையில் பாலாவும் ஒருவர், ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தார், இவர் இயக்கத்தில் வெளிவந்த சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், என பல தரமான படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்தவர். ஆனால் தற்போது இவரின் போதாத காலமோ என்னமோ கடந்த வருடங்களாக ஒரு தரமான படங்களை கொடுக்க நினைத்து இதுவரை அது நிறைவேறாமல் இருந்து வருகிறது. இதனை பார்த்த சூர்யா தனது 2டி தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்துள்ளாராம் அதில் சூர்யாவே நடிக்க இருக்கிறார் எனவும் தகவல் கிடைத்துள்ளன.