பாலா அணிந்திருக்கும் மாலைக்கு பின்னால் 100 பிணங்களின் கதை – மிரளவைக்கும் பின்னணி !

பொதுவாக படம் என்றாலே ஆக்ஷன், காதல், ரொமான்டிக் என எல்லாம் இருக்கும். ஆனால், இவருடைய படத்தைப் பொருத்த வரை அழுகை, அழுக்கு, கருப்பு என வித்தியாசமான அழுகை, தான் இருக்கும். மேலும், இவர் பாடலுக்காக படம் இல்லை, படத்தில் ஒன்று,இரண்டு பாடல்கள் இருந்தால் இருந்தால் போதும் என்ற சினிமாவின் விதிமுறைகளை மாற்றியவர். பாலா அவர்கள் 1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான சேது படத்தின் மூலம் தான் முதன் முதலாக இயக்குனர் ஆனார். இவருடைய முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர். அதுமட்டுமில்லாமல் விக்ரமை இந்த அளவிற்கு உருவாக்கியவரும் இயக்குனர் பாலா தான். தமிழில் இயக்குனர் பாலா அவர்கள் விக்ரமின் மகனை வைத்து படம் எடுக்க முடிவு செய்தார். மேலும், அந்த படத்திற்கு “வர்மா” என்றும் பெயர் வைத்தார். படமும் “வர்மா” எடுத்து முடிந்தது. படத்தை பார்த்த தயாரிப்பாளர் இதை வெளியிட்டால் படம் ஓடாது, நஷ்டம் ஆகி விடும் என்று பாலாவின் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டார். பின் விக்ரம் ஆவது இந்த படத்திற்கு பாலாவிற்கு உதவி செய்திருக்கலாம். ஆனால், அவரும் செய்யவில்லை. ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் புது இயக்குனரை வைத்து படம் இயக்கினார் நடிகர் விக்ரம். இதனால் இயக்குனர் பாலா மனம் நொந்து போகும் அளவிற்கு முடங்கிப் போய் இருந்தார். அடுத்து படங்கள் கிடைக்காததால் மனம் வெறுத்துப்போய் காசிக்கு சென்றார். நான் கடவுள் படத்தின் காசிக்கு இவருக்கு நிறைய அகோரிகள் நட்பு கிடைத்தது. அவர்களிடம் தன் மன அழுத்தங்களை சொல்லிக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் தான் அகோரி ஒருவர் பாலாவுக்கு எலும்பு மாலையை பரிசாக அவர் கழுத்தில் அணிவித்தார். அந்த எலும்பு மாலை நூறு பிணங்களின் முதுகெலும்பிலிருந்து எடுத்து சிறு எலும்புகளாக உருவாக்கப்பட்ட மாலையாக இருந்தது. இந்த மாலையை போட்டுக் கொண்ட பின் பாலாவின் நடவடிக்கைகளில் பயங்கர மாற்றம் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.