பாலா இயக்கத்தில் மீண்டும் இணையவிருக்கும் மூவர் கூட்டணி – சூர்யா, ஆர்யா, அதர்வா !

சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணியில் சமீபத்தில் வெளியான ’காப்பான்’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சயீஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், சூர்யாவும் ஆர்யாவும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பாலா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஆர்யா மற்றும் அதர்வா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க இருப்பதாகவும், இப்படத்தில் சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பாலாவின் இயக்கத்தில் நான் கடவுள், அவன் இவன் போன்ற படத்தில் ஆர்யாவும், பிதாமகன், நந்தா ஆகிய படங்களில் சூர்யாவும் நடித்துள்ளனர். தற்போது இருவரும் இணைந்து பாலா இயக்கத்தில் நடிக்க உள்ளனர்.