பாலா இயக்கும் ” வர்மா “

தெலுங்கில் சந்தீப் ரெட்டி இயக்கிய இந்தப் படத்தில் விஜய் தேவனகொண்டா, ஷாலினி பாண்டே நடித்தனர். ரதன் இசை அமைத்திருந்தார், ராஜு தோட்டா ஒளிப்பதிவு செய்திருந்தார். காதல், படிப்பு இரண்டிலும் தோல்வி அடைந்த ஒருவனை அதிலிருந்து ஒரு பெண் மீட்பதான கதை. சதாரண கதை என்றாலும், அது சொல்லப்பட்ட திரைக்கதைக்காக வெற்றி பெற்ற படம்.

இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. பாலா இயக்குகிறார். விக்ரம் மகன் துருவ் சினிமாவில் அறிமுகமாகிறார். விஜய் தேவரகொண்டா நடித்த கேரக்டரில் துருவ் நடிக்கிறார்.