பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் – திரிஷா வலியுறுத்தல் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, யுனிசெஃப்பின் தூதுவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடைபெற்ற 'குழந்தைகளுக்கு எதிரான வன்முறை' குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட த்ரிஷா மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், “சினிமாவை நிஜ வாழ்க்கையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான சட்டத்தை கொண்டு தண்டிக்க வேண்டும், அரபு நாடுகளில் இருக்கும் உடனடி கடுமையான தண்டனையை போல இங்கேயும் கொண்டு வரவேண்டும். பெண்கள் தன்னம்பிக்கையுடன் தங்கள் லட்சியத்திற்காக போரடினால் நிச்சயம் வெற்றி பெற முடியும்” என்றார்.