பாலிவுட்டில் அமீர்கானுடன் கலக்கவிருக்கும் விஜய் சேதுபதி !

இந்திய மொழித் திரைப்படங்கள் பங்குபெறும் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா இந்த மாதம் 8ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா முழுவதும் 22 மொழிகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பங்கு பெற்றுள்ளன. இதில் சிறந்த படமாக விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படமும், சிறந்த நடிகருக்கான விருது நடிகர் விஜய் சேதுபதிக்கும், சிறந்த இயக்குநருக்கான விருது, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும் கிடைத்துள்ளது. இதனிடையே விஜய் சேதுபதி  நம்மிடம் வேறொரு தகவலையும் பரிமாறிக்கொண்டார். நான் நடித்துக் கொண்டிருக்கும் “சங்கத் தமிழன்” படப்பிடிப்பின் போது அங்கு பாலிவுட் நடிகர் அமீர் கான் வந்திருந்தார். இருவரும் மனம் விட்டு நீண்ட நேரம் பேசினோம். விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போகிறோம். மீதி விவரம் கூடியவிரைவில் தெரியப்படுத்துவோம் என்று கூறியுள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றி பெற்ற விகரம் வேதா ஹிந்திப் படத்தில் விஜய் சேதுபதி வேடத்தை ஏற்று நடிக்க உள்ளார் அமீர்கான். இவர்கள் இருவரும் இணையும் புதுப்படம் ரீமேக்கா அல்லது நேரடி கதை கொண்ட புதிய படமா என்பது தெரியவில்லை. ஆனால் இருவரும் இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளதால் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.