பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகும் விஷ்ணுவர்தன் !

குறும்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். இவர் நடிகர் கிருஷ்ணாவின் சகோதரராவார். அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம் உள்ளிட்ட படங்களை இயக்கினார். அஜித்தின் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களையும் இயக்கினார். கடைசியாக யட்சன் படத்தை இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து மூன்று வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த விஷ்ணுவர்தன், தற்போது இந்தியில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். கார்கில் போரின்போது வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி ஷேர்ஷா எனும் படம் உருவாகி இருக்கிறது. அதில் விக்ரம் பத்ரா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். தர்மா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கரன் ஜோகர் மற்றும் ஷபீர் பாக்ஸ்வாலா இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். சந்தீப் ஸ்ரீவத்சவா இந்த படத்திற்கான கதையை எழுதி இருக்கிறார். இப்படம் இந்தாண்டு ஜூலை 3-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.