பாலிவுட்டில் கால்பதிக்கும் கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷின் படங்கள் அனைத்தும் பெற்றி பெறுகின்றன. சர்க்கார், சண்டக்கோழி,தானா சேர்ந்த கூட்டம், சாமி 2, முதலிய படங்கள் வெற்றிப்படவரிசையில் அமைந்தது. மேலும் தெலுங்கில் மா நடி படமும் அவர்க்கு நல்ல அந்தஸ்தை பெற்று தந்தது. அதிர்ஷ்ட நடிகையாக இருப்பவர் அடுத்து பாலிவுட்டிலும் நடிக்கவிருக்கிறார். பதாய் ஹோ படத்தின் இயக்குனர் அமித் சர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். படத்திற்கான நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படுமென அறிவித்தனர்.