பாலிவுட்டில் ஹிர்திக் ரோஷனுடன் சேர்ந்து களமிறங்கும் தனுஷ் !

தனுஷ் ஏற்கனவே இந்தியில் ராஞ்சனா, ஷமிதாப் படங்களில் நடித்துள்ளார். ’ராஞ்சனா’வில் ஜோடியாக சோனம் கபூர் நடித்தார். இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. ’ஷமிதா’ படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்தார். இதில் தனுஷ் வாய்பேச முடியாதவராக வந்தார். இரண்டு படங்களுக்குமே இந்தி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு ‘த எக்ஸ்டிராடினரி ஜார்னி ஆப் த பகிர்’ என்ற ஹாலிவுட் படத்தில் கதாநாயகனாக வந்தார். இந்த நிலையில் மீண்டும் இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது இரண்டு கதாநாயகர்கள் கதை. இன்னொரு நாயகனாக பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்கிறார். கதாநாயகியாக சாரா அலிகான் வருகிறார். இந்த படத்தை ’ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் டைரக்டு செய்கிறார். படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.