பாலிவுட் படத்தில் நடிப்பதற்காக 25 கிலோ எடை குறைக்கிறார் விஜய் சேதுபதி !

நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். அனைவர்க்கும் பிடித்த நடிகராக இருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். ஹிந்தியில் அமீர் கான் நடிக்கும் லால் சிங் சதா படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தில் அவருடன் யோகி பாபுவும் நடிக்கிறார்.இந்த படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி 25 கிலோ எடையை குறைக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அமீர் கானுடன் ராணுவத்தில் பணிபுரிபவராக நடிக்க உள்ளார். இதனால் அவர் ஸ்லிம் அண்ட் பிட்டாக தெரிய வேண்டுமென்பதால் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. லால் சிங் தாத்தாவுக்காக நடிகர் அமீர் கான் தன் பங்குக்கு ஏற்கனவே 21 கிலோ எடை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.