Cine Bits
பாலிவுட் வாய்ப்பை கெத்தாக மறுத்த அனுஷ்கா !

தென்னிந்திய சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து நிற்பதோடு, ஒரு ஹீரோவுக்கான முக்கியத்துவத்துடன் வலம் வரும் நடிகைதான் அனுஷ்கா. தெலுங்கு அவருக்கு தாய்வீடு என்றாலும், தமிழ் சினிமாவில் அனுஷ்காவுக்கென்று பெரிய இடமிருக்கிறது. இந்நிலையில் அவர் நடித்த ‘பாகமதி’ படத்தை இந்தியில் ரீமேக் செய்கின்றனர். அதிலும் ஹீரோயினாக நடிக்க அவரையே கேட்டனர். ஆனால் ‘எனக்கு பாலிவுட் விருப்பமில்லை. சவுத் இந்தியாவே போதும்!’ என்று சொல்லி கெத்தாக அதை மறுத்துவிட்டார். அனுஷ்கா. இந்த தகவல் பாலிவுட்டில் பரவ, மிரண்டு விட்டனர். பாகுபலியின் இந்தி வெர்ஷன் செம்ம ஹிட்டு! அந்த வகையில் அனுஷை பாலிவுட்டில் அனைவரும் அறிவர்.