பா.இரஞ்சித்தை விருந்தளித்து பாராட்டிய அனுராக் காஷ்யப் !

பாலிவுட் திரைப்பட உலகின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். பல புதிய முயற்சிகளின் மூலம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிற முனைப்பில் இருக்கும் அவர், பாலிவுட்டில் அறிமுகம் ஆக இருக்கிற தமிழ் இயக்குனர் பா.இரஞ்சித்தை சந்தித்து பேசியிருக்கிறார். சமீபத்தில் 'காலா' 'பரியேறும் பெருமாள்' படங்களை பார்த்த இயக்குனர் அனுராக், இயக்குனர் இரஞ்சித்தை வரச் சொல்லி விருந்தளித்திருக்கிறார். இந்திய அளவில் தலித் அரசியலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் துணிச்சலாக பேசக்கூடிய படைப்பாளியான உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றும் தனது விருப்பத்தினை தெரிவித்திருக்கிறார் அனுராக் காஷ்யப்.