பா.ஜ.க-வில் இணைந்தாரா கீர்த்தி சுரேஷ்?

கீர்த்தி சுரேஷ், பா.ஜ.க-வில் இணைந்துவிட்டதாக ஒரு செய்தி பரவி வைரலானது. இதுகுறித்து விசாரித்தால் தகவல் தவறானது என தெரியவருகிறது. அதாவது கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ் பா.ஜ.க-வில் இருக்கிறார். அண்மையில் அவரது தாயார் மேனகா, பா.ஜ.க சார்பில் பிரதமரை சென்று சந்தித்தார். அதனால் கீர்த்தி சுரேஷும் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அது உண்மையில்லையாம். சுரேஷ் தவிர அவர் குடும்பத்தில் வேறு யாரும் பா.ஜ.க-வில் இல்லையாம்.