பா.ஜ.க-வில் இருந்து விலகினார் நடிகை காயத்ரி ரகுராம் !

சார்லி சாப்ளின், விசில் உள்ளிட்ட படங்களில் நடித்த காயத்ரி ரகுராம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதன்பின் பா.ஜ.க-வில் இணைந்து காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் அரசியிலில் இருந்து விலகுவதாக கூறினார். சினிமாவை விட அரசியலில் அதிக நடிகர் உள்ளனர். போராளிகள், தலைவர்கள், தொண்டர்கள், உறுப்பினர்கள் என அனைவரும் போலியாகவே உள்ளனர். என்னால் முழு நேரமும் நடித்து கொண்டிருக்க முடியாது. வெறும் வாக்குவாதங்களும் மற்றவர்களைக் குறை சொல்வதுமாக அரசியல் களம் மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது. சிறுபிள்ளைகளின் சண்டை போல் இருக்கிறது இவ்வாறாக அவர் தெரிவித்திருந்தார்.