பா.ரஞ்சித்.மனைவி வடிவமைத்த ஆடைகளை அணிந்து வந்த சாக்ஷி அகர்வால், மீராமிதுன் !

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பேஷன் ஷோ நடைபெற்றது. இதில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகைகள் சாக்‌ஷி அகர்வால், மீரா மிதுன் கலந்து கொண்டனர். இயக்குனர் ப.இரஞ்சித்தின் மனைவி அனிதா உருவாக்கிய புதிய ஆடையை நடிகை சாக்‌ஷி அகர்வால் அணிந்து பங்கு பெற்றார். விதவிதமான  ஆடைகளை அணிந்து ஆண்கள், பெண்கள் ஒய்யாரமாக நடந்து சென்றது அனைவரையும் கவர்ந்தது.