பா.விஜய் ஹீரோவாக நடிக்கும் “ஆருத்ரா” த்ரில்லர் படமாக உருவாகிறது.

ஞாபகங்கள், இளைஞன், ஸ்ட்ராபெரி ஆகிய படங்களில் பாடலாசிரியர் பா.விஜய்க்கு ஹீரோவாக நடிக்க ஆசை வந்ததால் இப்படங்களில் நடித்துள்ளார்.  ஆனால் இந்த படங்கள் எதுவும் கமர்ஷியல் ரீதியாக வெற்றியை  தரவில்லை. ஆனாலும் அவருக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை விடுவதாகயில்லை. தற்போது   பா.விஜய் இயக்கி கதாநாயகனாக நடிக்கும் “ஆருத்ரா” த்ரில்லர்  படமாக உருவாகிறது. இந்த படத்தை  “ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்  நிறுவனமும், வில்மேக்கர்ஸ்” என்ற நிறுவனமும்  இணைந்து தயாரிப்பதாக  ப்ரட்ஸ் லுக் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.