பிகில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் – தீபாவளிக்கு ரிலீஸ் !

ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவர காத்திருக்கும் படம் பிகில். இந்த படத்திற்கு  சென்சார் சர்டிபிகேட் பெறுவதற்காக இரண்டு நாட்களாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழ்நிலையில் பிகில் படத்தை பார்த்து ஆய்வு செய்த சென்சார் போர்டு உறுப்பினர்கள், தற்போது இப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர். இதையடுத்து படத்தை வெளியிடுவதற்கான பணிகளை படக்குழுவினர் தொடங்கி உள்ளனர். பிகில் படம் சுமார் இரண்டு மணி நேரம் 58 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக உருவாகி இருக்கிறது. யுஏ சான்றிதழ் என்பதால் விஜய் ரசிகர்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் படத்தின் ஆக்சன் காட்சிகள் அதிகம் இருக்கும் என்று சொல்லலாம். எனவே இந்த தீபாவளி விஜய் ரசிகர்களுக்கும் ஆக்சன் தீபாவளியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.