பிக்பாஸை வறுத்தெடுத்த நடிகை விசித்திரா !

பார்வையாளர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்தமுறை பங்கேற்கப்போவது யார் யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அதேவேளையில் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர், நடிகைகளிடம் தொலைக்காட்சி நிர்வாகம் மும்முரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் 1990- களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை விசித்ரா, தனது சமூகவலைதள பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில், உலகத்தின் முன்பு பல் துலக்குவதும், தூங்கி வீங்கிய முகத்துடன் படுக்கையில் இருந்து எழுந்து குத்துப்பாட்டுக்கு நடனமாடுவதும், அவர்கள் கொடுக்கும் சில்லியான டாஸ்க்குகளை செய்வதும், என்னுடைய நேர்மையான உணர்வுகளை வெளிப்படுத்தாமல் நானல்லாத வேறொரு பிம்பத்தை என்னால் பிரதிபலிக்க முடியாது என்று கூறியுள்ளார்.