Cine Bits
பிக்பாஸ் வீட்டில் இருந்திருந்தால் வனிதாவுடன் ஜாலியாக பேசியிருப்பேன் – டானி !

பிக்பாஸ் முதல் சீசனில் தமிழ்நாட்டு மக்கள் வில்லியாக பார்த்தது நடிகை காயத்ரியை தான். அவரை விட மோசமானவர்கள் உலகத்தில் கிடையாது என்று எல்லாம் மக்கள் நினைத்தார்கள். ஆனால் அவரை விட படு வில்லியாக இப்போது மக்களுக்கு தெரிபவர் வனிதா. அண்மையில் பிக்பாஸ் 2வது சீசன் போட்டியாளர் டேனி ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் இந்த சீசன் போட்டியாளர் அனைவரையும் இமிடேட் செய்தார். பின் வனிதா பற்றி கேட்டபோது, நான் அந்த வீட்டில் இருந்திருந்தால் ஜாலியாக இருக்கும், வனிதாவுடன் நன்றாக சந்தோஷமாக பேசியிருப்பேன் என பேட்டி கொடுத்துள்ளார்.