பிக்பாஸ் 3-ல் நாங்கள் இல்லை – பிரபல நடிகர், நடிகை விளக்கம் !

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வெளியான தகவல் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்கள் நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக்கும், நடிகை லைலாவும். கடந்த 2017-ம் ஆண்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக பார்வையாளர்களைப் பெற்று பிரபலமானது. இதற்கான புரமோ வீடியோக்கள் எடுக்கும் பணியில் நிகழ்ச்சிக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பிரமாண்ட செட் அமைக்கும் பணிகளும் துவங்கியுள்ளன. இந்த முறை நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற கேள்வியை இப்போதே பார்வையாளர்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர். நடிகைகள் சாந்தினி தமிழரசன், சுதா சந்திரன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாஜ கூறப்பட்ட நிலையில் தற்போது நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் ரமேஷ் திலக்கும், நடிகை லைலாவும் கலந்து கொள்வதாகவும் கூறப்பட்டது. இதை இருவரும் மறுத்துள்ளனர்.