பிக் பாஸிற்கு பிறகு படவாய்ப்புகள் எதிர்பார்த்த அளவு இல்லை – ரித்விகா வருத்தம் !

மெட்ராஸ், கபாலி, ஒருநாள் கூத்து படங்களில் நடித்தவர் ரித்விகா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் பங்கேற்று வெற்றி பெற்றார். அதற்கு பின் சினிமாவில் பெரிய அளவில் வருவார் என்று எதிர்பார்த்தால் பெரிய படங்களில் அவரை பார்க்க முடியவில்லை. இதுபற்றி அவர் கூறுகையில், சினிமாவில் நடிக்கணும்னு ஆசைப்பட்டு வந்த பொண்ணு நான். ஆனால் 'மெட்ராஸ்' படத்துக்கு பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. முக்கியமாக, 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும்ன்னு நினைத்தேன். ஆனால், புகழ் கிடைத்ததே தவிர எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. முன்னாடி இருந்தது மாதிரியேதான் இருக்கு. அதுக்காக நான் வருத்தப்படவும் இல்லை. அது ஒரு நிகழ்ச்சி அவ்வளவுதான் என என்னை நானே சமாதானப்படுத்தி கொண்டேன் என்கிறார்.