பிக் பாஸ்சிலிருந்து வெளியேறிய தர்ஷனுக்கு வலைவிரித்த தயாரிப்பு நிறுவனம் !

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, வெற்றியாளராக கருத்தப்பட்ட போட்டியாளர் தர்சன் வெளியேற்றப்பட்டமை ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்திருக்கும் தர்சனின் எதிர்காலம் , திரையுலகில் பிரகாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தர்சனினி வெளியேற்றம் குறித்து பட தயாரிப்பாளர் லிப்ரா சந்திரசேகரன் ட்வீட் ஒன்றை பதிவிட்டு அதில் ‘பிக் பாஸ் வீட்டில் உங்கள் விளையாட்டு முடிந்தாலும், கோலிவுட்டில் இனிமேல் தான் ஆரம்பம்’ என பொருள்பட பதிவிட்டுள்ளார். இதன்முலம் கவினை வைத்து ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தை தயாரித்த லிப்ரா ப்ரொடக்ஷன் தர்ஷனை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தர்ஷன் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.