பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நடிகர் கமல்ஹாசனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்தவுள்ள நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இந்த ஷோவிற்காக பல கோடி ருபாய் செலவில் ஒரு பிரமாண்ட வீடு போன்ற செட் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக கமல் எவ்வளவு சம்பளம் வாங்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கமல் 15 கோடி சம்பளத்திற்கு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஹிந்தியில் இதே நிகழ்ச்சியை நடத்தும் சல்மான் கானின் சம்பளத்தை விட இது மிக மிக குறைவு. அவர் ஒரு எபிசோடுக்கு 5 கோடி ருபாய் வாங்குகிறார் என கூறப்பட்டு வருகிறது.