பிக் பாஸ் புகழ் ஆரவ் நடித்த மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது !

பிக் பாஸ் முதல் சீனில் ஆண் மாடலாக கலந்துகொண்டவர் ஆரவ். ஓவியாவுக்கு மருத்துவ முத்தம்கொடுத்த விவகாரத்தில் பிரபலமானார். பின்பு பிக் பாஸ் டைட்டில் வின்னராகவும் தேர்வு செய்யப்பட்டார். அவர் முதன் முதலாக நடித்த ராஜ பீமா படத்திற்கு பிறகு ஆரம்பித்த  மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படம் முன்பே ரிலீஸ் ஆவது போல் தெரிகிறது. நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டுவிழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அவரையும் அவரது நடிப்பையும் பலர் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். முதல் சீனின் வெற்றியாளர் என்பதற்கான அடையாளத்தை இனிமேல் தான் பெறப்போகிறார். வாழ்த்துக்கள் ஆரவ்.