பிக் பாஸ் புகழ் கவின் அம்மாவிற்கு பணமோசடி வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை !

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கவின் பங்கேற்றுவருகிறார். சின்னத்திரையைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும், கால்பதித்துள்ளார். இந்த நிலையில், கவினின் தாயார் சீட்டு கம்பெனி நடத்துவதாக கூறி பண மோசடியில் சிக்கியுள்ளார். இது குறித்து அவர் மீது தொடரப்பட்ட வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் உள்பட 2 பெண்களுக்கு திருச்சி நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. மற்ற இரு பெண்களும் கவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்து பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கவினுக்கு தெரிய வந்த பிறகு அவர் உடனடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.