பிக் பாஸ் புகழ் முகெனின் உண்மையான ஜோடி !

பிக்பாஸ் வீட்டில் கவின்-சாக்ஷியின் காதல் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு அடுத்து அபிராமி-முகென் என்ற பேச்சு வந்தது. அபிராமி அவரிடம் ஐ லவ் யூ சொல்வது என இருந்தாலும் முகென் ஆரம்பத்தில் இருந்து அவர் எனக்கு நல்ல தோழி என்று தான் கூறி வருகிறார். இந்த நேரத்தில் சாண்டியிடம் முகென் அபிராமி பற்றி சமீபத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நான் ஆரம்பத்திலேயே அபிராமியிடம் எனக்கு காதலி இருக்கிறாள் என்றும் அவர் பெயர் நதியா என்று கூறியிருப்பதாக நிகழ்ச்சி தெரிவித்தார். அதன்பின்னர் சமூக வலைதளத்தில் முகென் மற்றும் அவரது காதலி நதியா இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி விட்டன.