பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக செல்லவிருக்கும் சினேகன் !

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சேரன், ரகசிய அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சாக்‌ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் கடந்த வாரம் விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். இவர்கள் வீட்டுக்குள் சென்று போட்டியாளர்களிடையே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தினர். இந்நிலையில், பிக்பாஸ் முதல் சீசனில் 2-வது இடம் பிடித்த சினேகன் விருந்தினராக செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சினேகன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, ”பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக செல்ல அழைப்பு வந்துள்ளது. இப்படிப்பட்டவர்களுடன் உள்ளே சென்று இருக்க வேண்டுமா? என்று யோசித்துக் கொண்டு இருக்கின்றேன் என்று பதிவு செய்துள்ளார்.